மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: வெந்தயக்கீரைக் கடையல்!

கிச்சன் கீர்த்தனா: வெந்தயக்கீரைக் கடையல்!

தேவையான பொருள்கள்:

வெந்தயக்கீரை - ஒரு கட்டு

துவரம் பருப்பு - நான்கு கை அளவு

நடுத்தரமான வெங்காயம் - 1

நடுத்தரமான தக்காளி - 1

பச்சை மிளகாய் - 10 எண்ணிக்கை

புளி - ஒரு எலுமிச்சை அளவு

மஞ்சள் - கால் தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி (விருப்பமுள்ள எண்ணெய் பயன்படுத்தலாம்)

கடுகு - கால் தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெந்தயக்கீரையைக் கழுவி, இலையை மட்டும் ஆய்ந்து கொள்ளவும், தண்டை அகற்றி விடவும்.

அழுத்த சமையல் கலனில் (Pressure Cooker) துவரம் பருப்பு, வெந்தயக்கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புளி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து 250 மில்லி தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.

நான்கு சீட்டி (whistle) வரும் வரை காத்திருக்கவும்.

நீராவி அழுத்தம் அடங்கும் வரை காத்திருக்கவும். (10-15 நிமிடம்)

பிறகு சமையல் கலனை திறந்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

மத்து கட்டை அல்லது மசி கட்டை கொண்டு நன்றாக கொதித்த கரைசலை மசிக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை சேர்க்கவும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும், கருவேப்பில்லை சேர்க்கவும். (தாளிப்பதற்கு வேறு ஏதேனும் தாங்கள் பயன்படுத்த விரும்பினால் அதையும் சேர்க்கலாம்)

ஒன்று நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும்.

சுவைக்குச் சிறிது மல்லி தழைகளைச் சேர்த்து கொள்ளுங்கள்.

சுவையான வெந்தயக்கீரைக் கடையல் தயார்.

கீர்த்தனா சிந்தனைகள்:

மனைவியைச் சமாளிக்க...

அவள் கோபமாக இருக்கையில் அவளைவிட கோபமாக இருங்கள்!

சோகமாக இருக்கையில் அவளைவிட நீங்கள் சோகமாக இருங்கள்!

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon