மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

குஜராத்தில் மீண்டும்  நிலநடுக்கம்!

குஜராத்தில் இன்று (மார்ச் 29) அதிகாலை 4.03 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

குஜராத்தில் கடந்த 10ஆம் தேதியன்று கட்ஜ் பகுதியில், 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குஜராத் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக 2001ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குஜராத் மாநிலம், கட்ஜ் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,67,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 4 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்து மக்கள் வாழ்விடங்கள் இன்றித் தவித்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மிகப் பெரிய நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon