மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 15 டிச 2019

ஆமிர் கான் கர்ணனா, ஓஷோவா?

ஆமிர் கான் கர்ணனா, ஓஷோவா?

தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்தில் நடித்துவரும் ஆமிர் கானின் அடுத்த படம் குறித்த பேச்சுக்கள்தான் பாலிவுட் வட்டாரங்களில் அதிகமாக அடிபடுகின்றன.

இயக்குநர் ஷகுன் பத்ரா, ஓஷோவின் வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஓஷோவாக நடிக்க ஆமிர் கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி இணை தயாரிப்பில் மகாபாரதம் தொடர் படங்களாக உருவாகவுள்ளதாகவும் இந்தப் படத்தில் ஆமிர் கான் நடிக்கவுள்ளதாகவும் பாலிவுட் திரையுலகின் வணிக செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்துவரும் ரமேஷ் பாலா சில நாள்களுக்கு முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்தப் படத்தில் ஆமிர் கான் கர்ணன் வேடம் ஏற்று நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஆமிர் கானின் மக்கள் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆமிர் கான் பல்வேறு படங்களில் நடிப்பதாக செய்திகள் வலம்வருகின்றன. தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்தில் மட்டுமே அவர் தற்போது நடித்துவருகிறார். வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. ஒப்பந்தமான பின்பு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம்” என்று கூறியுள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon