மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 16 டிச 2019

பகத்சிங் நினைவு தின அணிவகுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

பகத்சிங் நினைவு தின அணிவகுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியார் நினைவு நாளை முன்னிட்டு அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் ஐந்து நாள்களுக்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை அமைதி, ஒற்றுமை மற்றும் மதச்சார்பின்மையை வலியுறுத்தி மார்ச் 21 முதல் 30ஆம் தேதி வரை அணிவகுப்பு நடத்தக் காவல் துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரிலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மனுதாரர்கள் தரப்பில் ஏற்கெனவே அளித்த மனு காலாவதி ஆகிவிட்டதால், எந்த இடத்தில் பொதுக் கூட்டம் நடைபெறும் உள்ளிட்ட தகவல்களுடன் புதிய மனு அளித்தால் அனுமதி வழங்கப்படும்” என்று அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் புதிய மனு அளிக்க வேண்டும் என்றும், அந்த மனு மீது ஐந்து நாள்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டு மனுவை முடித்துவைத்தார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon