மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

மாருதி கார் புல்லட் : களைகட்டும் விராலிமலை ஜல்லிக்கட்டு!

மாருதி கார் புல்லட் : களைகட்டும் விராலிமலை ஜல்லிக்கட்டு!வெற்றிநடை போடும் தமிழகம்

விராலிமலையில், ஸ்ரீபட்டமரத்தான் கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று(மார்ச் 29) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலேயே, புதுக்கோட்டை மாவட்டத்தில் தான், அதிக அளவில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு போட்டிகள் நடக்கின்றன. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளம், ஸ்ரீபட்டமரத்தான் கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியை சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் இன்று காலை 7.20 மணிக்குத் தொடங்கி வைத்தார். அவருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, திருச்சி மாநகர ஐஜி உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

போட்டியில் புதுக்கோட்டை,மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 2000க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றுள்ளன. போட்டி தொடங்குவதற்கு முன், மாடுபிடி வீரர்கள் மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர். சீறிப் பாயும் காளைகளை வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர்.

களத்தில் நின்று விளையாடும் காளைகளின் உரிமையாளருக்கு மாருதி காரும், சிறந்தமாடுபிடி வீரர்களாகத் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கும் வழங்கப்படவுள்ளது. மேலும், ஐந்து ஹீரோ ஹோண்டா பைக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுதவிர வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்க காசுகள், வெள்ளிக் காசுகள், சைக்கிள்,பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon