மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

வங்கிக் கொள்ளை: மூவர் கைது!

வங்கிக் கொள்ளை: மூவர் கைது!

சென்னை ஐஓபி வங்கிக் கொள்ளை வழக்கில் மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 26ஆம் தேதி பணம், நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ரூ.32 லட்சம் பணம் மற்றும் 130 பைகளில் வைக்கப்பட்டிருந்த அடகு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஐஓபி வங்கி அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகள், தடயவியல் ஆய்வுகளின்படி, போலீசார் விசாரணையைத் துவங்கினர்.

கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த நேபாளத்தைச் சேர்ந்த சபிலால் மற்றும் அவரது மகன் டில்லுவுக்கு தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் எழுந்தது. இவர்கள் கொள்ளையடித்து விட்டு நேபாளம் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து தனிப்படையினர் நேபாளம் விரைந்தனர். அப்போது, சபிலாலின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், அவர் நேபாளத்தைச் சேர்ந்த ஹீலாராம், ஹர்பகதூர் ஆகியோரிடமும், பெங்களூருவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரிடம் அதிகம் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், ஹீலாராம், ஹர்பகதூர், ரமேஷ், சபிலால் என 6 பேர் திட்டமிட்டு இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில் ஹிலாராம், ஹர்பகதூர்,ரமேஷ் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் காவலாளி சபிலால், டிலு ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon