மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

வெப் சீரிஸில் கமல் மகள்!

வெப் சீரிஸில் கமல் மகள்!

தமிழ், இந்தி திரைப்படங்களை அடுத்து தற்போது இணையத் தொடரில் நடிக்கவுள்ளார் நடிகை அக்‌ஷரா ஹாசன் .

நடிகர் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். இவர் இந்தியில் தனுஷ், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவான ஷமிதாப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். லாலி கி ஷாதி மெயின் லாட்டூ தீவானா என்ற இந்தி படத்தில் நடித்த அக்‌ஷரா ஹாசன், இதையடுத்து தமிழில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து படங்கள் ஏதும் ஒப்புகொள்ளாமல் இருந்துவந்த அக்‌ஷரா விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தூங்கா வனம்’ ராஜேஷ் எம்.செல்வா இயக்க, கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்துவருகின்றன.

இந்த நிலையில், அக்‌ஷரா ஹாசன் ஒரு வெப் சீரிஸில் நடிக்கிறார். ஷீஜா ஜோஸ் எழுதிய ‘குட் பை கேர்ள்’ என்ற புத்தகத்தைத் தழுவி இந்த வெப் சீரிஸ் தயாராகவுள்ளது. இதைப் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தத் இயக்கவுள்ளார். ஆக்‌ஷன் - த்ரில்லராக உருவாகும் இதன் படப்பிடிப்பு டெல்லி மற்றும் பாங்காக்கில் நடைபெற இருக்கிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon