மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

எஃகு உற்பத்தி: ஜப்பானை வீழ்த்திய இந்தியா!

எஃகு உற்பத்தி: ஜப்பானை வீழ்த்திய இந்தியா!

சர்வதேச எஃகு உற்பத்தியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.

2017ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகச் சர்வதேச எஃகு உற்பத்தியில் இந்தியா மூன்றாமிடத்தில் இருந்தது. இந்த நிலையில் சென்ற பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் எஃகு உற்பத்தி 3.4 சதவிகித உயர்வுடன் 8.4 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச எஃகு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னர் இரண்டாம் இடத்திலிருந்த ஜப்பான் சென்ற ஆண்டில் 0.5 சதவிகித சரிவுடன் மொத்தம் 8.2 மில்லியன் டன் அளவிலான எஃகை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. அதேபோல, ஜனவரி - பிப்ரவரி காலகட்ட உற்பத்தியிலும் ஜப்பானை இந்தியா விஞ்சியுள்ளது.

முன்னதாக 2017ஆம் ஆண்டில் ஜப்பான் மொத்தம் 104.7 மில்லியன் டன் அளவிலான எஃகை உற்பத்தி செய்திருந்தது. ஆனால், இந்தியாவின் எஃகு உற்பத்தி 101.4 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான இந்த உற்பத்தி இடைவெளி 2016ஆம் ஆண்டில் 9.3 மில்லியன் டன்னாகவும், 2015ஆம் ஆண்டில் 16 மில்லியன் டன்னாகவும் இருந்தது. 2017ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா தனது எஃகு உற்பத்தியை 6.2 சதவிகிதம் உயர்த்திக் கொண்டுள்ளது. அதேநேரம் ஜப்பானின் எஃகு உற்பத்தி சென்ற ஆண்டில் சரிவைச் சந்தித்திருந்தது. இந்த ஆண்டில் எஃகு உற்பத்தியில் இரண்டாம் இடத்தைத் தனதாக்கும் தகுதியை இந்தியா கொண்டுள்ளது. சர்வதேச எஃகு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் (831 மில்லியன் டன்) நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon