மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

காக்னிசன்ட் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

காக்னிசன்ட் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

வரி ஏய்ப்பில் ஈடுபட்ட விவகாரத்தில் காக்னிசன்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையினரால் முடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான காக்னிசன்ட் இந்தியாவிலும் தனது கிளை நிறுவனங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னை மற்றும் மும்பையிலுள்ள இந்நிறுவனக் கிளைகள் வரி செலுத்தும் விவகாரத்தில் தொடர்ந்து மோசடி செய்து வந்துள்ளன. அதாவது 2016-17 நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் ரூ.2,500 கோடி வரி செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காக்னிசன்ட் நிறுவனத்தின் சென்னை மற்றும் மும்பை அலுவலகங்களின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர்.

காக்னிசன்ட் நிறுவனத் தரப்பிலிருந்து அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு முன்னர் காக்னிசன்ட் நிறுவனத்தின்மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வருமான வரித் துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காக்னிசன்ட் நிறுவனம் ஏற்கெனவே இந்திய ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்த விவகாரத்தில் அதன் ஊழியர்களிடையே அதிருப்தியைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 8,000 இந்தியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon