மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த காலரா!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த காலரா!

சென்னையில் இருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காலரா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உள்நோயாளிகள் இரண்டு பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த நோய் குறித்து சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மக்களுக்கு முக்கிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், நன்கு கொதிக்கவைத்த தண்ணீரை ஆற வைத்து பருக வேண்டும்; தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களை வாங்கி உபயோகிக்கக் கூடாது என்றும், சாக்கடைக் கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் செல்லும்போதும், வெளியிடங்களுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பும்போதும் கால்களைத் தண்ணீரால் நன்றாகக் கழுவி சுத்தம் செய்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் காலரா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவு, தண்ணீர் மூலம் காலரா நோய் பரவியதா என்ற கோணத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon