மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

ரயில்வேக்கு ஐடியா கொடுத்தால் பரிசு!

ரயில்வேக்கு ஐடியா கொடுத்தால் பரிசு!

இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த நல்ல ஆலோசனை வழங்குபவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய அரசுத் துறையான ரயில்வே துறை பொதுமக்களிடம் ரயில்வேயை மேம்படுத்த ஆலோசனை கேட்டுள்ளது. ரயில்வே துறையின் வருவாயை எந்த வகையில் உயா்த்துவது, தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், சேவைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடா்பான திட்டங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முறை குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

முதல் சுற்றில் சிறந்த ஆலோசனைகளை அனுப்பிய 50 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிலிருந்து, 10 சிறந்த நம்பிக்கைக்குரிய ஆலோசனைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு நிபுணர் குழுவால் மேலும் மதிப்பீடு செய்யப்படும். இறுதியில், 10 பேரின் ஆலோசனைகளை ரயில்வே அமைச்சகம் தேர்ந்தெடுக்கும்.

வழங்கப்படும் ஆலோசனைகளில் சிறந்த ஆலோசனைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதன்படி முதல் பரிசுக்கு ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசுக்கு ரூ.5 லட்சமும், மூன்றாவது பரிசுக்கு ரூ.3 லட்சமும், நான்காவது பரிசுக்கு ரூ.1 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வருகிற மே மாதம் 19ஆம் தேதிக்கு முன்னரே https://innovate.mygov.in/jan-bhagidari/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது