மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

மாணவர்களுக்காக மலிவு விலை ஐபாட்!

மாணவர்களுக்காக மலிவு விலை ஐபாட்!

ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபாட் மாடலை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகள் பாதுகாப்பானது என்றாலும் விலை அதிகம் என்பதே இந்தியப் பயனர்களுக்கு பெரும் தயக்கமாக இருந்து வந்தது. ஆனாலும் அதன் பாதுகாப்பு தரம் மற்றும் பயன்பாடுகளைக் கருத்தில்கொண்டு ஒருமுறையாவது ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளை பயன்படுத்த வேண்டும் எனப் பலரும் காத்திருக்கும் வேளையில் விலை குறைந்த ஐபாட் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்னர் வெளியான மாடல்களைப் போல் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த புதிய ஐபாட்டின் விலை ரூ.21,500 ஆகும். 9.7 இன்ச் திரையளவு கொண்டுள்ள இந்த மாடல், A10 ப்ராசெஸ்சர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஆகிய மாடல்களில் இந்த A10 ப்ராசெஸ்சர்தான் பயன்படுத்தப்பட்டிருந்தது. 32GB இன்டர்னல் வசதியும், 10 மணி நேரம் பேட்டரி சக்தி செயல்படும் அளவுக்கு இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிகாகோவில் இதை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம் இதன் விற்பனை விரைவில் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதில் ஆப்பிள் பென்சில் என்ற ஒன்றையும் வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனுடன் பயனர்கள் பயன்படுத்த 200GB iCloud ஸ்டோரேஜ் வழங்குவதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon