மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 மா 2018

நடிகை கஸ்தூரி சர்ச்சை கருத்து: காவல் துறைக்கு உத்தரவு!

நடிகை கஸ்தூரி சர்ச்சை கருத்து: காவல் துறைக்கு உத்தரவு!

நடிகை கஸ்தூரி மீதான புகார் குறித்து ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் கொடூரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அச்சம்பவம் குறித்து கருத்து பதிவிட்டிருந்தார். வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு செய்திகளில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், “பிழைக்கு வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள். வெள்ளம்புதூர் படுகொலை குறித்து முந்தைய கீச்சில் ‘அந்நியக்கும்பல்’, (Anniyar), என்பதற்குப் பதில் வன்னியர் (Vanniyar) என்று எழுத்துப்பிழை காரணத்தால், அந்தக் கீச்சை நீக்குகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து சமூகநீதி சத்திரிய பேரவை என்ற அமைப்பின் நிர்வாகி எஸ்.எம்.குமார் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், சாதி மோதலை உருவாக்கக் கூடிய அளவுக்குக் கருத்தைப் பதிவு செய்திருந்த நடிகை மீது ஐபிசி 153-ஏ பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.எம்.குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கஸ்தூரியின் பதிவு, இரு பிரிவினருக்கு இடையே மோதலை உருவாக்கும் செயல். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

வியாழன் 29 மா 2018