மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

பாகிஸ்தானில் பாகுபலி 2!

பாகிஸ்தானில் பாகுபலி 2!

பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் பாகிஸ்தான் திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது.

இதுவரை இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களும் அவருக்கு வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளன. அவர் கடைசியாக இயக்கிய பாகுபலி 2 பிரம்மாண்டமாகவும், கலைநயத்துடனும் இருந்ததால், உலகம் முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படம் இந்தியாவைத் தாண்டி உலக அளவில் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் ரிலீஸ் ஆகி அங்கும் வசூலைக் குவித்தது.

வரலாற்றுச் சம்பவங்களின் சாயலில் அமைக்கப்பட்ட திரைக்கதை, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்குகள், கிராபிக்ஸ் தொழில்நுட்பம் என இப்படமானது சினிமாவை வேறு தளத்திற்கு அழைத்துச் சென்றது. லண்டனில் உள்ள ‘மேடம் துஸாட்ஸ்’ அருங்காட்சியகம் பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரத்தை சிலையாக வைக்கப்போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்திற்குக் கிடைத்த இன்னொரு மகுடமாக ராஜமௌலியின் பாகுபலி படம் பாகிஸ்தான் திரைப்பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராஜமௌலிக்கு பாகிஸ்தான் கராச்சி நகரிலிருந்து அழைப்பு வந்துள்ளது.

இது குறித்துக் கூறியுள்ள ராஜமௌலி "பாகுபலி படம் எனக்கு நிறைய நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பை வழங்கியது. இந்தப் படத்தால் முதல்முறையாக பாகிஸ்தான் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. கராச்சியில் நடக்கும் பாகிஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு வந்துள்ளது" என்று தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon