மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

அட்சய திரிதியை: சரியும் தங்கம் விற்பனை!

அட்சய திரிதியை: சரியும் தங்கம் விற்பனை!

விலை உயர்வு மற்றும் ஹால்மார்க் தரச் சான்று போன்ற காரணங்களால் இந்த ஆண்டின் அட்சய திரிதியை (ஏப்ரல் 18) தினத்தன்று தங்கம் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை 16 மாத உயர்வில் (10 கிராம்) ரூ.30,970 ஆக உள்ளது. தொடர் விலை உயர்வால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. 2017 ஏப்ரல் 28ஆம் தேதி அட்சய திரிதியை தினத்துக்குப் பிறகு தங்கத்தின் விலை இதுவரையில் 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அப்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,925 ஆக இருந்தது. சென்ற ஆண்டின் அட்சய திரிதியை தினத்தில் மொத்தம் 40 டன் அளவிலான தங்கம் விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டில் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டு அட்சய திரிதியை தினத்தில் சென்ற ஆண்டு விற்பனை அளவை எட்டினாலே அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்று அனைத்திந்திய நகை மற்றும் ரத்தினங்கள் கவுன்சில் ஆலோசகரான அசோக் மினவலா கூறுகிறார்.

மும்பையைச் சேர்ந்த நகை வியாபாரியான குமார் ஜெயின் பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திடம் தங்கம் விற்பனை குறித்துப் பேசுகையில், “சென்ற ஆண்டின் அட்சய திரிதியை தினத்துக்கு முன்பாக தங்கத்தின் விலை குறைவாக இருந்ததால் விலை உயர்வுக்கு முன்னரே அதிக தங்கத்தை வாங்கி வைக்க முதலீட்டாளர்கள் முயன்றனர். எனவே சென்ற ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்தது. மேலும், திருமண சீசனை முன்னிட்டு தங்கத்தின் தேவையும் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் மார்ச் 18ஆம் தேதி ’குடி பட்வா’ பண்டிகையின் போது கூட தங்கத்துக்கான தேவை குறைவாகவே இருந்தது. மேலும், இந்த ஆண்டில் திருமண சீசன் குறைவாகவே இருக்கிறது. எனவே இந்த ஆண்டின் அட்சய திரிதியை தினத்தில் தங்கத்தின் தேவையும் விற்பனையும் மந்தமாகவே இருக்கும்” என்றார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon