மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

மாதவனுக்கு பதிலாக சோனு சூட்

மாதவனுக்கு பதிலாக சோனு சூட்

மாதவன் நடிப்பதாக இருந்த வில்லன் வேடத்தில், அவருக்குப் பதிலாக நடிகர் சோனு சூட் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரோகித் ஷெட்டி இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாக இருக்கும் படம் ‘சிம்பா’. இப்படம் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து ஹிட்டான ’டெம்பர்’ படத்தின் இந்தி ரீமேக்காகும். தர்மா புரொடக்ஷன்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ரோஹித் ஷெட்டி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவுள்ளன. ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக பிரபல நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா அலிகான் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க மாதவனை ஒப்பந்தம் செய்திருந்தார் ரோகித் ஷெட்டி. ஆனால் கடந்த மாதம் மாதவனுக்குத் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தக் காயம் குணமாக இன்னும் சில மாதம் ஆகும் என்பதால் தற்போது டெம்பர் ரீமேக்கில் நடிக்க இயலாது என்று மாதவன் அப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில், மாதவனுக்குப் பதிலாக அந்த வேடத்தில் சோனு சூட் நடிக்கப்போகிறார். இவர் அருந்ததி , சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரன்வீர் சிங் முதன்முறையாக போலீஸ் வேடம் ஏற்று நடிக்கும் இப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon