மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

மாணவர் தற்கொலை: நடவடிக்கை எடுக்கப் போராட்டம்!

மாணவர் தற்கொலை: நடவடிக்கை எடுக்கப் போராட்டம்!

செய்யாறு அரசு கலை கல்லூரியில் தேர்வுக் கட்டணத்தை வாங்க மறுத்ததால், இரண்டாமாண்டு படிக்கும் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை செய்யாறு அடுத்த முக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் தணிகைமலை(23). இவர் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு படித்துவந்தார்.

இவருக்கு தேர்வு எழுதுவதற்குத் தேவையான வருகைப் பதிவு இல்லை; 65 சதவிகிதத்துக்கு பதிலாக 41 சதவிகிதமே இருந்தது. அதனால் மாணவனிடம் தேர்வுக் கட்டணத்தை வாங்க கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவன் நேற்று (மார்ச் 27) மதியம் வீட்டின் அருகே வி‌ஷம் அருந்தி மயங்கிக் கிடந்தார். இதனைப் பார்த்தவர்கள் மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சக மாணவர்கள் கல்லூரியில் வரலாற்றுத் துறை கட்டடத்தின் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் மாணவர்கள் சேதப்படுத்தினர். மாணவனின் தற்கொலைக்கு வரலாற்றுத் துறை தலைவர்தான் காரணம்; அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஏராளமான போலீஸார் கல்லூரியில் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டனர்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon