மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 மா 2018

மத்திய அரசுக்கு தண்டனை : ஜெயகுமார்

மத்திய அரசுக்கு தண்டனை : ஜெயகுமார்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை எனில் அதற்கான தண்டனையை மத்திய அரசு அனுபவிக்க வேண்டிவரும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாளை வரை மட்டுமே அவகாசம் உள்ளது. மத்திய நீர்வளத் துறை அமைச்சகமோ, காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 28) கோயம்பேட்டில் அரசின் சாதனை விளக்கக் கண்காட்சியை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. அதுவரை மத்திய அரசு என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் 29ஆம் தேதிக்கு பிறகுதான் எடுக்க முடியும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்" என்று தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் மற்ற கட்சிகளை விட அதிமுக அதிகமான அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. இன்றைக்குக் கூட 17ஆவது நாளாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார். "தீர்ப்பை அளித்தது தனி அமைப்பு அல்ல, இந்தியாவின் உயர்ந்த அமைப்பான உச்ச நீதிமன்றம். எனவே அதனை மத்திய அரசு அமல்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அப்படி அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இதனைத் தனிப்பட்ட முறையில் நான் கூற முடியாது. உரிய காலத்திற்குள் தீர்ப்பை அமல்படுத்தாமல் மத்திய அரசு உதாசீனப் படுத்தினால், அதற்கான தண்டனையை அனுபவிக்கும் சூழல் வரும். தமிழக அரசைக் கண்டித்து மட்டும் திமுக கண்டன தீர்மானம் இயற்றியிருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்து ஏன் திமுக மண்டல மாநாட்டில் தீர்மானம் இயற்றப்படவில்லை?" என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

புதன் 28 மா 2018