மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

உயிரே போனாலும் பதவியை உட மாட்டோம் -அப்டேட் குமாரு

உயிரே போனாலும் பதவியை உட மாட்டோம் -அப்டேட் குமாரு

கட்சி சின்னத்தைதான் புடுங்கிட்டாங்கன்னு பாத்தா, கட்சியே இல்லைன்னுட்டாங்களே என்னண்ணே இப்படி ஆகிப்போச்சுன்னு தினகரன் டீம் ஆள் ஒருத்தர்ட்ட கேட்டேன். அட, நானே பந்தாவுக்கு அடிச்சு வெச்ச விசிட்டிங் கார்டெல்லாம் வீணாப்போச்சுன்னு கவலைல இருக்கேன்றார். என்னண்ணே இப்புடி பொறுப்பில்லாம பேசுறீங்கன்னு கோவிச்சிக்கிட்டதுக்கு, நான் பேசுனதே பொறுப்பில்லைன்ற, அங்க ஒருத்தர் தற்கொலை பண்ணிக்குவேன்னு சொல்லிருக்கார் கேட்டியான்னார். எதிர்ப்பை காட்றதுக்காக சொல்லியிருப்பாருன்னு விளக்குனதுக்கு, அடேய் லூசு செத்தாலும் சரி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்னு நாசூக்கா சொல்றார்டா அவர்ன்னு சொன்னதுக்கப்பறம் தான் புரிஞ்சுச்சு. அட, ஆமாம்ணே. அவர் பேசுனதை கேட்டப்ப எனக்கு இதை ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்துதுண்ணே. நம்ம மோடி கூட 50 நாள்ல சரி பண்ணலைன்னா மண்ணெண்ணையை ஊத்தி கொளுத்துங்கன்னாரே. இது அதுல்ல. அப்டேட்டைப் படிங்க. நான் போய் சி.எஸ்.கே மேட்ச் பாத்து ஜாதியை ஒழிச்சிட்டு வர்றேன்.

@BoopatyMurugesh

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - MP. நவநீதகிருஷ்ணன்

அதெல்லாம் வேணாம்.. திரும்ப "பியூட்டிபுல் காஷ்மீர் பாட்டு பாடுவே"ன்னு மிரட்டுங்க..

@kathir_twits

பிறர் என்ன நினைப்பார்களோ..என்ற எண்ணம் வராமல் இருப்பதே தன்னம்பிக்கை தான் !!!

@sathishkvpl

நாட்டின் மூவண்ணச்சின்னத்திற்கு தரும் மதிப்பை போல!

ரோட்டின் மூவண்ணச்சிக்னலுக்கும்

தருவோம்!

சுடுகாட்டில் பார்ப்பதை விட

நடுரோட்டில் பார்ப்பதே அதிகம்!!

சாவு

@வாசுகி பாஸ்கர்

எங்கவூர் சுடுகாட்டுல பொணம் எரிஞ்சிகிட்டே இருக்கும் போது எழுந்திருக்கும், பொத்துன்னு ஒண்ணு தடியால அடிச்சி திரும்ப படுக்க வைப்பாங்க.

உயிர்த்தெழுதல்

@kathir_twits

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிட்டால் தற்கொலை செய்வோம் - நவநீத கிரிஷ்ணன் அதிமுக எம்.பி..

அமித்ஷா : இதை நாங்க சொல்லி தரவே இல்லையே

அமித்ஷா_உளறல்கள்

@CreativeTwitz

-தோழி உங்க நம்பர் டெலிட் ஆயிடுச்சு. மறுபடியும் குடுங்க.

-நான் உங்களுக்கு நம்பரே தரலயே இன்னும்.

-பரவால தோழி இப்ப குடுங்க! டெலிட் ஆனா மறுபடி வாங்கிக்கிறேன்…

@CreativeTwitz

தீ தடுப்பு முன்னெச்சரிக்கையாக கோவிலில் பக்தர்கள் விளக்கு ஏற்ற கூடாது - தமிழ்நாடு அரசு

வீட்டுல யாரும் சமைக்க கூடாதுனு கூட சொல்லுவாங்க

@வாசுகி பாஸ்கர்

ஸ்டாலினை கிண்டலடித்து ஏழு நாள் கூட ஆகாத நிலையில் தக்காளி தொக்கா அமித்ஷா

கடவுளின் மேல் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது, ஜெய் ஸ்ரீராம்

@Kozhiyaar

ஆறுதல் தந்தவர்கள் ஆறுதல் தேட வைப்பது தான் வாழ்வின் பெரும் சோகம்!!!

@karna_sakthi

தற்கொலை கூட செஞ்சுப்போம்; ஆனா மோடி அரசு மேல கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தரமாட்டோம்ங்கிறதெல்லாம் கடைஞ்செடுத்த களவாளித்தனம்.

@senthilcp

அரசு,பதவியில் உள்ளவருக்கு கூடுதல் பொறுப்பு உண்டு.என்னதான் ஸ்டண்டு்க்காக சொன்னாலும் "தற்கொலை செய்து கொள்வோம்"என பேசுவது சட்டப்படி தவறு

@mekalapugazh

முதல்ல இந்திப்படங்களை டப் செய்யாமல் வெளியிட்டு தமிழகத்தில் வசூல் செய்து பாருங்க...

பிற்பாடு பாஜக தமிழகத்தில் வாக்கு வாங்குவதைப் பற்றி யோசிப்போம்.

@vandavaalam

மீத்தேன், நியூட்ரினோ திட்டத்துக்கு கூட சில ஆதரவு குரல்கள் தென்பட்டுச்சு. ஆனா ஸ்டெர்லைட்டுக்கு கிட்டத்தட்ட எல்லோருமே எதிர்ப்பு குரல் தான். பயம்.. கேன்சர்ன்னா பயம்.

@வாசுகி பாஸ்கர்

மனம் கலகமடையும் போது நாலு ராஜா பாட்டு கேட்டு நிதானமாகும் கொடுப்பினை இளையராஜாவுக்கில்லை.

Muthu Kumar G

பழமொழி அன்போட நான்.அங்க யானை போட்டீங்கள்ல இங்க பூனை போட்டுகங்க.நடுவுல நடுவுல ஆக ஆகவேலா சேத்துகங்க.

அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல உபிஸ ஓட்டனும்னா மட்டும் சந்தோஷம் அருவி மாதிரி கொட்டுது

Periyasamy Shanmugam

சிலரை பாத்ததும் "அப்ப பாத்த மாதிரியே இருக்கீங்க"ன்னு சொல்றதோட ஒரிஜினல் அர்த்தம்

"சனியனே நீ இன்னுமா திருந்தல?" என்பதேயாகும்.

Thippu Sulthan K

பிளீஸ் ஷேர் பார் ஹன்ரடு பீப்புள்ஸ்.

பணம் காசு கஷ்டம் வரும் போது ..கண்ண மூடி ஒரு ரெண்டு மினிட் மோடி ஜி ய நெனச்சிகுட்டு ஒரு ரெண்டு வாட்டி பாரத் மாத்தக்கி ஜெய் ன்னு சொன்னா அம்புட்டு கஷ்டமும் பறந்து போயிரும்..இத பாத்தவனே பத்து பேருக்கு ஷேர் பண்ணுனா நைட்டு உங்க கனவுல மோடி ஜி வருவார்..மீறி கிண்டல் கேலி பண்ணுனா..உங்கள் ஆதர் காருடுல உள்ள நம்பர் மாயமா மறஞ்சிரும் ...

Umamaheshvaran Panneerselvam

தம்பி..என்ன CTS மூட்டாய்ங்களா. சரி வா.. என்ன படிச்சிருக்கா.

B.E computer Science, M.S Cyber security.

சரிவா..போய் பைக் ஸ்டாண்ட்ல நைட்டு செக்கியுரிட்டி வேல பாரு..காலையில பால் பாக்கெட் கணக்க MS paint ல எழுதிக்க.

மாசம் பத்தாயிரம் ச்சம்பளம்..புடி கவர்மெண்ட்டு வேல..

மாஸ்டர் பீஸ்

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தற்போது எதையும் கூற முடியாது.-எடப்பாடி பழனிசாமி

இல்ல நீ கூறித்தான் பாரேன்... பதவி கண் முன்னாடி வந்து போகுமா இல்லையா.

Bobby Gopi

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

சட்டம்டா..தர்மம்டா... நீதிடா..

-லாக் ஆஃப்

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon