மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது!

ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது!

ரிசர்வ் வங்கி அதன் தனிப்பட்ட சுதந்திரங்களின் அடிப்படையில்தான் செயல்படுகிறது என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

டெல்லியிலுள்ள ஜீசஸ் அன்ட் மேரி கல்லூரியில் மார்ச் 26ஆம் தேதியன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் சுப்ரமணியன், "இந்திய ரிசர்வ் வங்கி அதன் தனிப்பட்ட சுதந்திரங்களின் அடிப்படையில்தான் செயல்படுகிறது. வெறும் சட்டங்கள் மட்டுமே ரிசர்வ் வங்கியை இயக்கவில்லை. அதன் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கிதான் பொறுப்பு. நல்ல முடிவுகள் எடுத்தால் அது பயன்படும், தவறான முடிவுகள் என்றால் அது ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும்" என்றார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் கடந்த வாரத்தில், ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் போதவில்லை என்று கூறியிருந்ததையடுத்து, அரவிந்த் சுப்ரமணியன் மேற்கண்டவாறு பேசியுள்ளார். மார்ச் 15 அன்று குஜராத் சட்டப் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த உர்ஜித் படேல் பேசுகையில், "ரிசர்வ் வங்கிக்கு மிகக் குறைந்த அதிகாரம்தான் உள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளைக் கையாளுகிற முழு அதிகாரமும் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்வது அதிகரித்துள்ளது கோபமுறச் செய்கிறது. சீரற்ற விதிகளைத் திருத்த வேண்டும்" என்று பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon