மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

குக்கர்: தடையில்லை, நிறுத்தி வைத்துள்ளனர்!

குக்கர்:  தடையில்லை, நிறுத்தி வைத்துள்ளனர்!

குக்கர் சின்னத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைப்பதாக மட்டுமே தெரிவித்துள்ளது என்று தினகரன் விளக்கமளித்துள்ளார்.

குக்கர் சின்னத்தையும், வேறு பெயரையும் தினகரன் தரப்புக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்தத் தீர்ப்புக்கு இன்று (மார்ச் 28) உச்ச நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்தது. மேலும் இரட்டை இலை சம்பந்தமாக தினகரன் தாக்கல் செய்துள்ள வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், "உச்ச நீதிமன்றம் குக்கர் சின்னத்தை எங்களுக்கு வழங்கியதற்கு தடை எதுவும் விதிக்கவில்லை. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி மட்டுமே வைத்துள்ளதாகக் கூறியுள்ளது. இடையில் தேர்தல் வந்தால் நீதிமன்றத்தை நாடி பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளதாக எங்களுடைய வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்" என்று தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக நின்று அதிமுகவைத் தோற்கடித்தோம். மேலும் மூன்று வாரத்திற்குள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்ற அச்சத்தில் உச்ச நீதிமன்றத்தை அதிமுகவினர் நாடியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon