மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 மா 2018

விடாமல் முயற்சிக்கும் இந்திய அணி!

விடாமல் முயற்சிக்கும் இந்திய அணி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் ஒரு தங்கத்தை வென்று அசத்தியுள்ளது.

மெக்ஸிகோவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற சீனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி முதலிடம் பெற்றது. அதன் தொடச்சியாக ஆஸ்திரேலியாவில் மார்ச் 19ஆம் தேதி தொடங்கிய ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய ஜூனியர் அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்று (மார்ச் 28) நடைபெற்ற 25மீட்டர் பிஸ்டல் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் முஸ்கன் தங்கப்பதக்கம் வென்றார். இந்திய அணி இதனால் மொத்தமாக 9 தங்கப்பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

நாளை போட்டிகள் முடிவடையும் நிலையில் இன்னும் ஒரு தங்கப்பதக்கம் வென்றால் முதலிடம் பெற்றுவிடலாம் என்ற நிலையில் இந்திய அணி போராடி வருகிறது. முதலிடத்தில் உள்ள சீனாவும் 9 தங்கப்பதக்கம் வென்றுள்ளது. ஆனால் மொத்தமாக 25 பதக்கங்களை கைப்பற்றி உள்ளதால் முதலிடத்தை சீனா தக்க வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி 22 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த தொடரின் தொடக்கம் முதலே இந்திய அணி சீனாவை வீழ்த்த முயற்சி செய்து வருகிறது.

இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை மனு பேகர் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் இதற்கு முன்னதாக பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம் கைப்பற்றினார் என்பது குறிப்படத்தக்கது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

புதன் 28 மா 2018