மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

காஜலுக்குப் பரிசு தந்த சத்குரு

காஜலுக்குப் பரிசு தந்த சத்குரு

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்குப் பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் சமீபத்தில் பேரணி ஒன்றை நடத்தினார். அவரது முயற்சிக்கு ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மேலும் 16 மாநிலங்களில் நடைபெற்ற இந்தப் பிரமாண்டமான பேரணிக்குத் திரையுலகினர், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் பேரணியிலும் கலந்துகொண்டனர்.

இதன் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை வார்லி ஸ்டுடியோவில் நடைபெற்ற பேரணியில் காஜல் அகர்வால் தனது சகோதரியுடன் கலந்துகொண்டார். அப்போது பேசிய காஜல், “நல்ல விஷயத்தை முன்னிட்டு கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாற்றத்தை நாம்தான் தொடங்க வேண்டும். அதை நம்மில் இருந்து ஆரம்பிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது இந்தப் பேரணியில் காஜல் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவிக்கும்வகையில் சத்குரு ஜகி வாசுதேவ் பரிசு ஒன்றையும் பாராட்டுக் கடிதம் ஒன்றையும் காஜல் அகர்வாலுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள காஜல் அகர்வால், “இந்தப் பரிசை நான் பொக்கிஷமாகப் பாதுகாக்க முடிவு செய்திருக்கிறேன்; இதை அளித்த சத்குருவுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

இதேபோல இப்பேரணியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் சேவாக், தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மிதாலி ராஜ் உள்ளிட்ட பிரமுகர்கள் பலருக்கும் பரிசு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon