மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

அசோக் லேலண்ட் வாகன விலை உயர்வு!

அசோக் லேலண்ட் வாகன விலை உயர்வு!

வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் தனது அனைத்து வாகனங்களின் விலையையும் 2 சதவிகிதம் வரையில் உயர்த்துவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹிந்துஜா குழுமத்தின் ஒரு அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், வாகனங்களுக்கான உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால் வாகனங்களுக்கான விலையையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பு மட்டுமல்லாமல் ஏ.ஐ.எஸ். 140 விதிமுறைகள் காரணமாகவும் விலை உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏ.ஐ.எஸ். விதிமுறைப்படி, மக்களுக்கான போக்குவரத்துச் சேவை வாகனங்களில் எச்சரிக்கை பட்டன் மற்றும் கண்காணிப்பு ஜிபிஎஸ் வசதி அமைக்கப்பட வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு முன்பாகவே, டாடா மோட்டார்ஸ், நிசான், ஆடி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்திருந்தன. இதில் குறிப்பாக ஆடி நிறுவனம் தனது கார்களின் விலையை ரூ.1 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையில் உயர்த்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon