மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

வதந்திகள் ஜாக்கிரதை!

வதந்திகள் ஜாக்கிரதை!

திரைத் துறையில் எந்த நடிகையின் மீது அந்த சமயத்தில் அதிக கவனம் குவிகிறதோ அவர்களைப் பற்றிய செய்திகள் பரவும். அதைவிட அதிகமான வதந்திகளும் உடனடியாகப் பரவத் தொடங்கும். அதில் பெரும்பாலானவை காதல் வதந்திகளாகத்தான் இருக்கின்றன. கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை இதுவே நிலைமை.

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு உள்ளிட்ட சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவருபவர் நடிகை ராக்‌ஷி கண்ணா. இவர் தெலுங்கில் பரவலாக கவனம் பெற்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரத் தொடங்கியுள்ளார். விஷால் நடிப்பில் புதிய படத்திலும் ராக்‌ஷி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேஸ்மிரித் பும்ராவோடு காதல் கொண்டுள்ளதாகவும், இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதாகவும் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. ராக்‌ஷி கண்ணா இதை முற்றிலுமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். அவரை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. இதுவரை அவரை ஒருமுறைகூட நேரில் சந்தித்தது இல்லை. பரப்பப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. முறையான தகவல்களைப் பெறாமல் ஒரு பெண்ணைப் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்புவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்று அதில் தெரிவித்துள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon