மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

பங்குனி உத்திரம்: 150 சிறப்புப் பேருந்துகள்!

பங்குனி உத்திரம்: 150 சிறப்புப் பேருந்துகள்!

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பழநிக்கு 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 23ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்தத் திருவிழா வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடக்கிறது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பழநிக்கு 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

எனவே, பக்தர்களின் வசதிக்காகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி முருகனை தரிசனம் செய்ய செல்வார்கள் என்பதால், 30 மற்றும் 31ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களும் 27 சிறப்புப் பேருந்துகள் பொள்ளாச்சியிலிருந்து இயக்கப்படவுள்ளன.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon