மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

ஜிஎஸ்எல்வி : லைவ் கவரேஜ்!

ஜிஎஸ்எல்வி : லைவ் கவரேஜ்!

தொலைத்தொடர்புக்குப் பயன்படும் செயற்கைக்கோளைக் கொண்டுசெல்லும் ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் இன்று மதியம் 1.56 மணிக்குத் தொடங்கியது.

தகவல் தொலைத்தொடர்புக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது ஜிசாட் 6ஏ. இது கிரயோஜினிக் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் 6ஆவது செயற்கைக்கோள் ஆகும். இதே போல், இதைச் சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி இந்தியாவின் 12ஆவது ராக்கெட் ஆகும். இந்த செயற்கைக்கோள் நாளை மாலை 4.56 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் 415.6 டன் எடையும், 49.1 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த செயற்கைக்கோளின் வாழ்நாள் 10 ஆண்டுகளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் வீடியோவை, இஸ்ரோ நிறுவனம் நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon