மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 மா 2018

குக்கர் சின்னத்துக்கு இடைக்காலத் தடை!

குக்கர் சின்னத்துக்கு இடைக்காலத் தடை!

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்கி உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்சிப் பெயர், சின்னம் ஆகியவை எடப்பாடி-பன்னீர் தரப்புக்கு கிடைத்த நிலையில், தங்களுக்குக் குக்கர் சின்னமும், வேறு பெயரும் வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 9ஆம் தேதி குக்கர் சின்னத்தையும், விரும்பும் பெயர்களில் ஒன்றையும் தினகரன் தரப்புக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. மேலும் கடந்த 16ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தினகரன் ஆரம்பித்தார்.

இதனை எதிர்த்து எடப்பாடி-பன்னீர் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவில், கட்சி தொடங்குவதற்கு முன்னரே தினகரன் தரப்புக்கு சின்னம் ஒதுக்க உத்தரவிட்டது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு முன்னதாகவே டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டால், தங்களது கருத்தைக் கேட்காமல் முடிவு செய்யக் கூடாது என்று தினகரன் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 28) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையில், டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

மேலும் எடப்பாடி-பன்னீர் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி தினகரன் தொடர்ந்த வழக்கை 3 வாரத்துக்குள் தில்லி உயர் நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், தினகரனின் வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் வழக்கில் இரு தரப்பும் கூடுதலாக ஆவணங்களைத் தாக்கல் செய்யக்கூடாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

புதன் 28 மா 2018