மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

சென்னையில் காதலியைத் தாக்கியவர் கைது!

சென்னையில் காதலியைத் தாக்கியவர் கைது!

சென்னையில் காதலியை பிளேடால் தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யபிரகாஷ். இவர் ஏர்இந்தியா நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரும் சென்னை விடுதி ஒன்றில் தங்கி பணி புரிந்து வரும் திருச்சியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காதலி பிற ஆண் நண்பர்களுடன் சகஜமாக பேசி வந்துள்ளார். இது சத்யபிரகாசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இருவருக்கும் மாறி மாறி சண்டை வரவே ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்தது. இதனையடுத்து சமாதானம் பேசுவது போல பேசி, காதலியை பல்லாவரம் பூங்காவிற்கு வரவழைத்தார் சத்யபிரகாஷ்.

அதன்படி அந்தப் பெண் அங்கு சென்றிருக்கிறார். அங்கு இருவரும் தங்களுக்குள்ள பிரச்னை குறித்து பேசியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, சத்யபிரகாஷ் தனது கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து காதலியின் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அறுத்திருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் அந்தப் பெண். அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டதோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சத்யபிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon