மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

வங்கிகளைத் தனியார்மயமாக்க ஆலோசனை!

வங்கிகளைத் தனியார்மயமாக்க ஆலோசனை!

இந்திய வங்கித் துறையில் நெருக்கடியான சூழல் நிலவுவதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கிவிடலாம் என்று அசோசேம் கூட்டமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பின் (அசோசேம்) பொதுச் செயலாளரான டி.எஸ்.ராவத் எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “முதற்கட்டமாகப் பொதுத்துறை வங்கிகளில் 80 சதவிகிதமாக உள்ள அரசின் பங்குகளை 50 சதவிகிதத்துக்கும் கீழாகக் குறைக்க வேண்டும். அரசின் பங்கானது 50 சதவிகிதத்துக்கும் கீழே வந்தால் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து வங்கிகள் வெளியேறிவிடும். இதன் மூலம் அவ்வங்கிகளின் உயர்மட்ட நிர்வாகிகள் சுதந்திரமான மேலாண்மையில் ஈடுபட முடியும். மேலும் அவர்கள் எந்தவித பயமுமின்றி கடன் வழங்குவதில் முடிவெடுக்க முடியும்.

எனவே தற்போது வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழலைச் சரிசெய்ய வங்கிகளைத் தனியார்மயமாக்குவதென்பது சிறந்த முடிவாக இருக்கும். அதேநேரம், வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் கடுமையாக நடந்து கொள்ளாமல் அரசியல் தலைவர்களின் ஒப்புதலுடனும் அப்பணியில் ஈடுபட வேண்டும். வங்கிகள் தனியார்மயமான பிறகு கடன் வழங்கும் விதிமுறைகள் மாறி, கடன் வழங்கும் நடைமுறை பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் ஏற்படாத அளவில் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுத் துறை வங்கிகள் தனியார்மயமாகிவிட்டால் அதன் நிர்வாகக் குழு மேலும் சிறப்பாக இயங்கும் என்பதோடு, அதன் இயக்குநர்களும் அதிக சுதந்திரத்துடன் செயல்படுவார்கள்” என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon