மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

கல்வி உரிமை சட்டம் : 92% பள்ளிகள் விதிமீறல்!

கல்வி உரிமை சட்டம் : 92% பள்ளிகள் விதிமீறல்!

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை, நாட்டில் 92% பள்ளிகள் பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் தெரிவித்துள்ளார்.

சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு, கல்வி கற்கும் உரிமை சட்டம் குறித்த மாநாட்டை, டெல்லியில் நேற்று(மார்ச் 27) நடத்தியது. இதில், 20மாநிலங்களிலிருந்து அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த, 10,000 பேர் பங்கேற்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3% மட்டுமே, கல்விக்காக செலவிடப்படுகிறது. ஆனால், 6% செலவிடப்படவேண்டும் என உலக நாடுகள் கூறுகின்றன. இந்தியா தனது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 0.06% தொகையை, மாணவர்களின் மனநலனை பாதுகாக்கும் திட்டங்களுக்கு செலவழிக்கிறது. பங்களாதேஷ் 0.44% செலவழிக்கிறது. உலகின் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், செலவிடப்படுவதை விட, 4 மடங்கு குறைவாக, கல்விக்கான தனி நபர் செலவினம் இந்தியாவில் உள்ளது. பள்ளி ஆசிரியர்களில், 20% பேர், முறையான பயிற்சிபெறாதவர்களாக உள்ளனர். இதற்காக, பல்வேறு சீர்திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டது. ஆனால், அவற்றை அமல்படுத்துவதில் அரசுகள் அலட்சியமாக உள்ளன என மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர், “இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 8 % பள்ளிகள் மட்டுமே கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றுகின்றன. 92% பள்ளிகள் பின்பற்றுவதில்லை. இதனால், ஒருதலைமுறை குழந்தைகள், அடிப்படை கல்வி அறிவு பெற முடியாமல் போகிறது. இந்தியாவில் கல்வியின் தரம் மிக மோசமான நிலையில உள்ளது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வியின் தரத்தை உயர்த்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon