மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

வங்கதேச சணல்: இறக்குமதிக் குவிப்பு வரி!

வங்கதேச சணல்: இறக்குமதிக் குவிப்பு வரி!

வங்கதேச நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சணல் பைகளுக்கான இறக்குமதிக் குவிப்பு வரியை இந்தியா நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'வங்கதேசத்திலிருந்து மிகக் குறைந்த விலையில், அதிகளவில் இந்தியா சணல் பைகளை இறக்குமதி செய்ததால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். எனவே அந்நாட்டிலிருந்து சணல் பைகள் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் விதமாக இறக்குமதிக் குவிப்பு வரியை விதிக்க வேண்டும்' என்று இந்திய சணல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த ’குவிப்புக்கு எதிரான மற்றும் இதர வரிகளுக்கான பொது இயக்குநரகம்’ (டிஜிஏடி) வங்கதேச சணல் பைகள் இறக்குமதிக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரியில் இறக்குமதி குவிப்பு வரியை விதித்தது.

பதினைந்து மாதங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த இறக்குமதி குவிப்பு வரிக்கான காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், இறக்குமதிக் குவிப்பு வரிக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்று இந்திய சணல் ஆலைகள் சங்கம் மீண்டும் முறையிட்டுள்ளது. இறக்குமதிக் குவிப்பு வரிக்கு விலக்களித்தால் மீண்டும் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சணல் சங்கம் கூறியுள்ளது. குலோஸ்டர் லிமிடெட், லுட்லோவ் ஜியூட் ஆகிய நிறுவனங்கள் இந்திய சணல் உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் நிறுவனங்களாக உள்ளன. இந்த நிறுவனங்களும் வங்கதேசத்தின் இறக்குமதிக் குவிப்பு வரியை நீட்டிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளன. டிஜிஏடி இந்த நிறுவனங்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து இறக்குமதிக் குவிப்பு வரியை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon