மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

நகைக் கடைகளில் கேமராக்கள் கட்டாயம்: போலீசார்!

நகைக் கடைகளில் கேமராக்கள் கட்டாயம்: போலீசார்!

நகைக் கடைகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று காவல் துறையினர் உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

சமீப காலமாகச் சென்னையில் வங்கி, ஏடிஎம் மற்றும் நகைக் கடைகளில் கொள்ளையடிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கொளத்தூர் நகைக் கடையில் ராஜஸ்தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். தொடர்ந்து திருமங்கலம் நகைக் கடையில் 10 கிலோ தங்க, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்நிலையில் நகைக் கடைகளில் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கச் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீசார் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.

நொளம்பூர் காவல் நிலையத்தில், சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட நகைக் கடை மற்றும் அடகுக் கடை அதிபர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில், நகைக் கடைகளில் உள்ளே மற்றும் வெளியே கட்டாயம் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். பழைய நகைகளை யாராவது விற்பனை செய்ய வந்தால் அவர்கள் பற்றித் தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேக நபர்கள் குறித்து உடனே காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து முழு விவரங்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் தரமான பூட்டுகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon