மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

வாய்ப்பைத் தவறவிட்ட இளம் வீரர்!

வாய்ப்பைத் தவறவிட்ட இளம் வீரர்!

மியாமி ஒப்பன் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் தானாசி கொக்கினாகிஸ் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓப்பன் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி வியப்பில் ஆழ்த்திய இளம் வீரர் தானாசி கொக்கினாகிஸ் நேற்று (மார்ச் 27) நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தும் தோல்வியைத் தழுவினார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் தானாசி கொக்கினாகிஸ், ஸ்பெயின் வீரர் ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோ உடன் பலபரீட்சை நடத்தினார். முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் தானாசி கொக்கினாகிஸ் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார், ஆனால் இரண்டாவது செட்டில் ஃபெர்னாண்டோ 6-4 என வெற்றி பெற்று போட்டியை சமன் செய்தார். வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றில் வெற்றிப் புள்ளிகளுக்கு அருகில் சென்ற தானாசி கொக்கினாகிஸ் இறுதியில் வாய்ப்பினை பயன்படுத்த தெரியாமல் தவற விட்டார். இதனால் டை பிரேக்கர் வரை சென்ற அந்த ஆட்டத்தில் 7-6 என ஃபெர்ணான்டோ வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஃபெடரரை வீழ்த்திய பின்னர் இந்த தொடரிலும் மற்ற வீரர்களை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இருந்தும் அந்த வாய்ப்பினை இளம் வீரர் தானாசி கொக்கினாகிஸ் தவறவிட்டுள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon