மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்!

திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்!

ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் மூவரும் நாடு திரும்பி உள்ளனர்.

இந்த அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பென்கிராஃப்ட் பந்தினைச் சேதப்படுத்தியது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட பென்கிராஃப்ட்டிற்கு 75 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்திற்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு, ஒரு போட்டிக்கான ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்திய வீரர்களுக்குச் சிறிய குற்றத்திற்காகக் கடும் தண்டனை வழங்கிய ஐசிசி ஆஸ்திரேலிய வீரர்களுக்குச் சாதமாக செயல்படுவதாக இந்திய் வீரர் ஹர்பஜன் சிங் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில் அதற்கு ஏற்ற நடவடிக்கையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தை நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் டிம் பைன் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எனவே ஸ்மித், பென்கிராஃப்ட், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகிய மூன்று வீரர்களையும் விசாரணைக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நாட்டிற்குத் திரும்ப அழைத்துள்ளது. அவர்கள் மீதான நடவடிக்கை குறித்த தகவல்களை இன்னும் 24 மணிநேரத்திற்குள் வெளியிடுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட அவர்களுக்கு பதிலாக க்லென் மேக்ஸ்வெல், மேத்யூ ரான்சோ, ஜோ பர்ன்ஸ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்மித்துக்குப் பதில் அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon