மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 மா 2018

அவமதிப்பு வழக்கு: புதுச்சேரி அரசும் முடிவு!

அவமதிப்பு வழக்கு: புதுச்சேரி அரசும்  முடிவு!

உரிய காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை எனில் மத்திய அரசின் மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

காவிரி வழக்கில் கடந்த மாதம் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பில், அடுத்த ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கான கெடு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் எதையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயர் இடம்பெறவில்லை, ஸ்கீம் என்றே இடம் பெற்றுள்ளது. எனவே காவிரி மேற்பார்வை ஆணையம்தான் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்துதான் மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது என்று தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தற்போது காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இன்று (மார்ச் 28) காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் காவிரி தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் நாராயணசாமி ஆலோசனையும் நடத்தி வருகிறார். ஆலோசனையில் புதுச்சேரி சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

புதன் 28 மா 2018