மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

பருப்பு : குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்!

பருப்பு : குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்!

ராபி பருவத்திற்கான சன்னா மற்றும் மசூர் ரக பருப்புகளை மத்தியப் பிரதேச அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச அரசு இதுவரை காளான், சன்னா மற்றும் மசூர் ரக பருப்பு வகைகளை பவந்தர் புக்தான் யோஜனா (பிபிஒய்) திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வந்தது. மத்தியப் பிரதேச விவசாயிகளுக்குக் கடந்த பருவங்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கு பிபிஒய் கொள்முதல் முறையில் உரிய விலை வழங்க இயலாமல் போனதும் ஒரு காரணமாகும். எனவே நடப்பு ராபி பருவத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில வர்த்தகர்களை வியப்புக்குள்ளாகியுள்ளது.

அடுத்த ஆண்டில் தேர்தல் வரவுள்ள நிலையில் மத்தியப் பிரதேச விவசாயிகளின் தொடர்ச்சியான எதிர்ப்புணர்வைக் குறைத்து அவர்களை அரவணைக்கும் வகையில் இந்த முயற்சியை ஆளும் பாஜக அரசு மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசு நடப்பு பருவத்திற்கான அறுவடையில் 1.50 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தை அவசியம் நிறைவேற்றும் என்று அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இதனால் இத்திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயிகளின் விலை வீழ்ச்சி சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்று மத்தியப் பிரதேச அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி முந்தைய பிபிஒய் திட்டத்திற்கு மூன்று மாதங்களைக் கடந்த பிறகும் மத்திய அரசின் நிதியிலிருந்து வரவேண்டிய ரூ.1,000 கோடியை மத்தியப் பிரதேச அரசு இன்னும் பெறாமல் உள்ளது. கடந்த காரிஃப் பருவத்தில் ரூ.1,900 கோடியை மத்தியப் பிரதேச அரசு விவசாயிகளுக்கு நேரடியாக பிபிஒய் திட்டத்தின் கீழ் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon