மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

நண்பனாக மாற அவகாசம் 14 நாட்கள்!

நண்பனாக மாற அவகாசம் 14 நாட்கள்!

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், friend requests-ற்கு பதிலளிக்கும் கால அளவை குறைத்துள்ளது.

ஃபேஸ்புக் பயன்படுத்தும் நபர் மற்றொருவருக்கு நண்பராக வேண்டும் என வேண்டுகோளை அனுப்பும் பொழுது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வரை காத்திருப்பில் இருக்கும். ஆனால் அதற்கு மாறாக புதிய அப்டேட் ஒன்றினை ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பயனர்கள் ஒருவரது friend requests-யை ஏற்றுக்கொள்ள 14 நாட்கள் கெடு விதித்துள்ளது.

ஒருவரை நண்பராக தேர்வு செய்ய வேண்டும் என்ற பட்சத்தில் பயனர்கள் அவருக்கு friend requests அனுப்புவர். அதனை அவர் காணாத பட்சத்தில் அவை நீண்ட நாட்கள் காத்திருப்பில் இருக்கும். அதுமட்டுமின்றி பல்வேறு பயனர்கள் அவருக்கு friend requests கொடுக்க முயற்சி செய்யும் பொழுது அதற்கு பெரும் சிக்கல் ஏற்படும் எனவே இதனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய அப்டேடினை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதில் 14 நாட்கள் மட்டுமே ஒருவரது friend requests காத்திருக்கும், அது அந்த பயனரால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் 14 நாட்களில் தானாக நீக்கம் செய்யப்படும்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon