மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

சிபிஐ மாநில மாநாடு தொடக்கம்!

சிபிஐ மாநில மாநாடு தொடக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு மன்னார்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) விதியின்படி அக்கட்சியின் அமைப்புகளுக்கான மாநாடு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து இந்த மாநாடுகளில் விவாதிக்கப்படும்.

அந்தவகையில், சிபிஐயின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் 24ஆவது மாநாடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைக்கக் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வை.சிவபுண்ணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பின்லே பள்ளி மைதானம் எதிரே அமைக்கப்பட்டுள்ள அரங்கில், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு இன்று காலை மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்தார்.

இதேபோல் தியாகிகள் சுடரைத் தா.பாண்டியன் ஏற்றினார். மாநாட்டைக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தொடங்கிவைத்து உரையாற்றினார். சிபிஐ தேசிய செயலாளர் ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பேச உள்ளனர். காவிரி விவகாரம், நியூட்ரினோ உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மார்ச் 31ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. 31ஆம் தேதி, அடுத்த 3 ஆண்டுகளுக்கான மாநிலக் குழு தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், மாநில செயலாளர் முத்தரசனுக்கு பதிலாக புதிய மாநில செயலாளர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon