மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

பாலிவுட் செல்லும் ரைஸா படம்!

பாலிவுட் செல்லும் ரைஸா படம்!

பிக்பாஸ் மூலம் கவனம் பெற்ற ரைஸா, ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துவரும் ’பியார் பிரேமா காதல்’ படத்தை பாலிவுட்டில் ரீ மேக் செய்திட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

இளன் இயக்கிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதோடு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.ஆர்.எஸ்.பிலிம்ஸ் மூலம் தயாரித்துவருகிறார். படப்பிடிப்பு 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து தயாரிக்கும் உரிமைக்காக பலர் அணுகியுள்ளதாக இளன் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் நடக்கவிருப்பதால் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த பிறகே ரீ மேக் பற்றிய விவரங்களை வெளியிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரொமான்டிக் காமெடி வகையில் உருவாகிவரும் இதற்கு மணிக்குமரன் சங்கரா படத்தொகுப்பாளராகவும், ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிகின்றனர். ஏற்கனவே படத்தின் இரண்டு போஸ்டர்கள், ஒரு பாடல் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon