மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சைக்கோ கொலைகாரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

சைக்கோ கொலைகாரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

நகைக்காகப் பெண்களைக் கொலை செய்த சைக்கோ கொலைகாரர்கள் இருவரின் இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோட்டில் நகைக்காக மோகனசுந்தரி என்ற பெண்ணை சதீஷ் குமார், சவுந்தரராஜன், மணிகண்டன் ஆகியோர் கடத்தி சென்று கொலை செய்தனர். 2012ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில், கொலையாளிகள் மூன்று பேர்மீது ஈரோடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் மணிகண்டன் தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், இந்த வழக்கு விசாரணையில் சதீஷ்குமார் மற்றும் சவுந்தரராஜன் ஏற்கனவே நான்கு பெண்களைக் கொன்றது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமார் மற்றும் சவுந்தரராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சதீஷ்குமார் மற்றும் சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை நேற்று (மார்ச் 27) விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஷ்குமார் அமர்வு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமார், சவுந்தரராஜன் ஆகியோரின் இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon