மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்த ஏடிஜிபி குழு!

பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்த ஏடிஜிபி குழு!

தமிழ்நாடு ரயில்வே காவல் துறையின் ஏடிஜிபி சைலேந்திரபாபு இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 12 மணி நேரம் 20 நிமிடத்தில் நீந்தி வந்துள்ளார்.

தமிழ்நாடு ரயில்வே காவல் துறையின் ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் 10 பேர் கொண்ட குழு நேற்று (மார்ச் 27) அதிகாலை 1.30 மணிக்கு இலங்கை தலைமன்னாரிலிருந்து ஆரம்பித்து ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு மதியம் 2 மணி 10 நிமிடத்தில் வந்துசேர்ந்துள்ளது. மொத்தமாக 12 மணி நேரம் 20 நிமிடத்தில் நீந்திக் கரைசேர்ந்துள்ளனர்.

நீர் விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சியைச் செய்துள்ளோம். மோசமான கடல் அலை மற்றும் ஜெல்லி மீன் தொல்லையால் எங்களால் வேகமாக நீந்த முடியவில்லை ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.

28.5 கிலோமீட்டர் தூரத்தை நீந்திக் கடந்த சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல் படையினரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மார்ச் 16ஆம் தேதி கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தமிழக காவல் துறை நீச்சல் பிரிவினைச் சேர்ந்த 18 பேருடன் பாக் ஜலசந்தி சர்வதேச எல்லையிலிருந்து நீந்தத் தொடங்கி அரிச்சல்முனை வரை 10.7 கி.மீ தொலைவை 2 மணி 45 நிமிடத்தில் நீந்திக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon