மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

ஆதார் - பான் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் - பான் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்கிக் கணக்கு, வருமான வரிக் கணக்கு, செல்போன் இணைப்பு மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் இணைப்புக் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு சார்பில் வங்கிக் கணக்கு, பான் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதார் - பான் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று (மார்ச் 27) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆதார் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வு இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எண்ணை வங்கி, மொபைல் எண், பான் கார்டு என இவற்றுடன் இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் மார்ச் 13ஆம் தேதி கூறியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon