மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 மா 2018

‘தோல்வியின் எதிரி’ - சீனிவாசன் அறிமுகப்படுத்திய இரட்டை அக்ரிமென்ட்!

‘தோல்வியின் எதிரி’  - சீனிவாசன் அறிமுகப்படுத்திய இரட்டை அக்ரிமென்ட்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 29

இராமானுஜம்

தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்த காலகட்டம். தமிழகம் முழுவதும் மதுரை கே.ஏ.எஸ்.சேகர் லாட்டரி சீட்டுக் கடைகள் பேருந்து நிலையங்களில் இருக்கும்.

ரேஷன் கடைகளில் இலவசப் பொருள்கள் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பதைப்போல, கே.ஏ.எஸ்.சேகர் லாட்டரி கடையில் லாட்டரி சீட்டு வாங்க காத்திருப்பார்கள். ‘ஒரு ரூபாய்க்கு ஒரு சீட்டு. முதல் பரிசு ஒரு லட்சம். விழுந்தால் வீட்டுக்கு, இல்லையேல் நாட்டுக்கு’ என கேசட் ஒலித்துக்கொண்டிருக்கும்.

லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு ஒரு லட்சம் கே.ஏ.எஸ்.சேகர் கடைகளில் விற்பனையான டிக்கெட்டுக்கே கிடைக்கும். இதனால்தான் அவரது கடையில் லாட்டரி சீட்டு வாங்கக் கூட்டம் அலைமோதும். சில மாதங்கள் ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு இரண்டு மூன்று பேரிடம் இருக்கும். அவ்விஷயம் வெளியில் வரும்முன் அந்த டிக்கெட் யாருக்கு விற்கப்பட்டிருக்கிறது, அவரது முகவரி அனைத்தும் கடையில் டிக்கெட் விற்பனை செய்யும்போதே வாங்கியிருப்பார்கள். எனவே, அந்த வீட்டுக்குக் கடையில் இருந்து ஆள் போகும். ஒரிஜினல் டிக்கெட் வைத்திருப்பவர் வங்கியில், பரிசுப் பணம் டெபாசிட் செய்யப்படும். மற்ற டிக்கெட்டுகளுக்கு சேகர் கடையில் இருந்து பரிசுத்தொகை கூடுதலாகக் கொடுக்கப்பட்டு டிக்கெட்டுகள் வாங்கப்படும். அப்படிப்பட்ட லாட்டரி சர்வாதிகாரியுடன் போட்டி போட்டு வேலூர் பகுதியில் லாட்டரி தொழில் செய்தவர் கோபால். அவரது மகன்தான் எஸ்.பிக்சர்ஸ் சீனிவாசன் என்கின்றனர். இவரால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அனுபவம்மிக்க விநியோகஸ்தர்கள் பலர். லாட்டரி விற்பனையில் அப்பா சேர்த்த பணம் சினிமா டிக்கெட் விற்கும் தொழில் செய்ய சீனிவாசனுக்கு கைகொடுத்தது என்கின்றனர் இவரது அப்பா பற்றி தெரிந்தவர்கள்.

எஸ்.பிக்சர்ஸ் என்கிற திரைப்பட விநியோக நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘மாயி’ படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானது. மாயி படத்தில் நாயகன் சரத்குமார் எல்லோருக்கும் நல்லது செய்யும் நாயகன். தமிழ் சினிமாவில் சீனிவாசனுக்குப் பிறரால் நல்லது நடக்கும். ஆனால், அவரால் மற்றவர்களுக்கு அவரை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமாவுக்கு நல்லது நடந்திருக்கிறதா என்பதற்கு ஆம் என்ற பதிலை எவராலும் கூற முடியாது என்கின்றனர் சென்னையில் உள்ள படத் தயாரிப்பாளர்கள். வேலூர் தென்னமரத் தெரு திரையுலகில் பிரபலம். சீனிவாசன் விநியோகத் தொழிலுக்கு வரும்முன் நூற்றுக்கணக்கான விநியோகஸ்தர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி எனக் குறைந்த பட்ஜெட்டில் படங்களை வாங்கி ஷிப்டிங் ஓட்டிக் கொண்டிருந்த 2000ஆம் காலகட்டத்தில், வேலூரில் ஏராளமானவர்கள் சினிமாவை நம்பி பொழப்பு நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் வேலூர் பகுதியில் இருந்து எம்.ஜி அடிப்படையில் படங்களை வியாபாரம் செய்யத் தொடங்கினார் சீனிவாசன்.

சினிமா வியாபாரத்தில் சொன்ன நேரத்தில் பணம் கொடுக்கும் விநியோகஸ்தர்களுக்கு எந்த ராஜபாட்டையிலும் கதவு தட்டாமலே திறக்கும். அதைத் தக்கவைத்துக் கொண்டார் சீனு. வியாபாரத்தில் தோல்வியின் எதிரியாக எப்போதும் இருந்துவரும் சீனு, சினிமா தொழிலைப் பாதுகாக்கவில்லை. வேலூர் விநியோகஸ்தர்கள் வளராமல் இருக்க தன்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மறைமுகமாக மேற்கொண்டார்.

‘மகேந்திர பாகுபலிக்கு ஏன் அரியாசனம்?’ எனக் கேள்வி எழுகிறபோது ‘மன்னன் எத்தனை எதிரிகளைக் கொன்றான் என்பதைவிட, எத்தனை குடிமக்களின் உயிரைக் காப்பாற்றினான் என்பதுதான் மணிமகுடத்தைத் தீர்மானித்தது’ என ரம்யா கிருஷ்ணன், நாசரிடம் கூறுவார். அதைப்போன்று தான் சக விநியோகஸ்தர்களின் வேலைவாய்ப்பு, வியாபாரத்துக்கு முதல் எதிரி சீனு எனக் கைகாட்டுகிறது வேலூர் வட்டாரம்.

விநியோகத் துறையில் இருந்துகொண்டே தியேட்டர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த சீனு சென்னையில் விஸ்வரூபம் எடுத்தார். தான் சொல்வதுதான் விலை; கொடுக்கவில்லை என்றால் பரவாயில்லை என வந்துவிடும் ஜென்டில்மேன் சீனு என்கிறது அவரது நட்பு வட்டம். ஆனால், கேட்ட விலைக்குக் கிடைக்காத படம் தன்னையே அழைத்துக் கொடுக்கும் வகையில் அந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருக்கும் மானேஜர் மற்றும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய செண்பகராமன்கள் மூலம் காய் நகர்த்துவார் சீனு.

சென்னை, வேலூர் இரண்டு பகுதிகளையும் தன் ஆளுகைக்குக் கொண்டுவந்த சீனு புதிய படங்களைத் திரையிட இரட்டை அக்ரிமெண்ட் நடைமுறையை, அறிமுகப்படுத்தியவர். அதுதான் சீனுவை அம்பானியாக்கியது; திரையரங்குகளை திவாலாக்கி சீனுவை நாடச் செய்தது.

தமிழ்நாட்டில் மொத்த வசூலில் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மட்டுமே கேளிக்கை வரி செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் 20% வரியைக் கழித்தவர். இது தியேட்டர் உரிமையாளருக்கும் விநியோகஸ்தருக்குமானது. அப்புறம் அம்பானி ஆவது எப்படி?

அம்பானி... அம்பானி என்கிறீர்களே அவரது தொழில் என்ன? சீனு தொழில் என்ன? எப்படி ஒத்துப்போகும்?

நாளை காலை 7 மணிக்கு...

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

புதன் 28 மா 2018