மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

கோகோ கோலா: பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு இழப்பீடு!

கோகோ கோலா: பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு இழப்பீடு!

டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் ராஜ்மோகன் ஆத்ரேயா என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டில் கோகோ கோலா வாங்கிப் பருகியுள்ளார். அவர் கோகோ கோலா பருகும்போதே ருசியில் ஏதோ மாறுதல் உள்ளதாக உணர்ந்துள்ளார். இந்தப் பானம் பழையதாக இருக்கலாம் என மருத்துவர் ராஜ்மோகன், அருகில் இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

அங்கு அருகில் இருந்தவர்கள் அந்த கோகோ கோலா பாட்டிலினுள் பூஞ்சை காளான் இருந்ததைக்கண்டு அதிர்ந்துள்ளனர். பின்னர் ராஜ்மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நலம் தேறியவுடன் கோகோ கோலா நிறுவனத்தின் மீது தன் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்காக இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், கோகோ கோலா நிறுவனம் மருத்துவர் ராஜ்மோகனுக்கு ரூ.24,606 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கோகோ கோலா நிறுவனம் டெல்லி மாநில நுகர்வோர் முறையீடு மையத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து இழப்பீடு வழங்கக் கோரி உத்தரவிட்டுள்ளது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon