மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 மா 2018

ஃபுட் கோர்ட்: தீவுகளில் கிடைக்கும் சுவையான உணவுகள்!

ஃபுட் கோர்ட்: தீவுகளில் கிடைக்கும் சுவையான உணவுகள்!

அந்தமான் தீவின் அழகைப் போலவே, அங்குள்ள உணவுகளும் சுவையானவை. இந்தியப் பெருநிலத்தின் முக்கிய சுவைகளின் கலவையை இங்கு பார்க்க முடியும். வழக்கமான உணவுகளுடன், கடல் உணவுகளும் இங்கு பிரபலம்.

இந்தியாவின் ஏழு யூனியன் பிரதேசங்களில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளும் ஒன்று. உலக சுற்றுலாப் பயணியரின் விருப்பமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அந்தமான் தீவுகள் விளங்குகிறது. இயற்கை அழகு, அந்த மக்களின் விருந்தோம்பல், அமைதியான சூழல் இவற்றுடன் தனிச்சுவை மிக்க உணவுகளும், அந்தமான் தீவுகளின் சிறப்புகளில் முதன்மையானதாக கட்டாயம் இடம்பெறும்.

நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட அந்தமான் மற்றும் நிக்கோபாரில், பலவகையான கடல் உணவுகளை சமைக்கின்றனர். நான்-வெஜிடேரியன் உணவுகளில் மீன், இறால், நண்டு ஆகியவற்றை பல வெரைட்டிகளில் தயார் செய்கின்றனர். வெஜிடேரியன் உணவுகள் என்றால், இந்தியாவின் தென்பகுதி உணவுகளும் வடஇந்திய உணவுகளும் பிரபலம். பழங்கள், காய்கறிகள் அதிகமாகக் கிடைப்பதால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சத்தான உணவுகளை உட்கொள்கின்றனர். அதேபோன்று, அரிசி இவர்களின் உணவுகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பிற இந்திய மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வசிப்பதால், கோதுமை மற்றும் அரிசி உணவுகளை விரும்பி உண்கின்றனர். இந்திய உணவுகளைப் போல், சைனீஸ் உணவுகளும் இங்கு அதிகம் சமைக்கப்படுகிறது.

பெனாங் கர்ரி

தாய்லாந்து வகை உணவான இது, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மிகவும் பிரபலம். இதில், சைவம் மற்றும் அசைவம் என இரண்டுமே உள்ளன. இந்தியா, சைனீஸ் மற்றும் தாய்லாந்து வகை உணவுகள்தான் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தயாரிக்கப்படுகின்றன என்றாலும், அங்கு கிடைக்கும் கடல் உணவுகளைப் பொறுத்து தயாரிப்பு முறை மாறுபடுகிறது. அசைவத்தில், பெனாங் கர்ரியை, இறால், வெங்காயம், மிளகு, எலுமிச்சை இலை, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து சுவையாக தயார் செய்கின்றனர்.

இந்தியன் தாளி

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால், எல்லா வகை உணவுகளும் இங்கு கிடைக்கின்றன. குறிப்பாக, இந்திய உணவகங்கள் அதிகம் உள்ளன. வடஇந்திய மற்றும் தென்னிந்திய தாளி உணவுகள் புகழ் பெற்றவை. வடஇந்திய தாளியில் சப்பாத்தி, சப்ஜி, சுவீட், தயிர், மோர் என்று பல பதார்த்தங்கள் உள்ளன. அதேபோல், வெஜிடேரியன் தாளியானது மலபார் பகுதி ஸ்டைலில் தயாரிக்கப்பட்டு, வாழை இலையில் பரிமாறப்படுகிறது.

பார்பிகியூ ஷ்ரிம்ப்

இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும், கடல் உணவுகளையே விரும்பி உண்கின்றனர். பல வகைகளில் கடல் உணவுகள் சமைக்கப்படுகின்றன. இறாலுடன் மசாலாக்கள் சேர்த்து பார்பிகியூ முறையில் காரமாக இந்த கடல் உணவு தயார் செய்யப்படுகிறது. இறால் வெந்தபிறகு, கிண்ணத்தில் வெண்ணெயை நிரப்பி, அதில் வைத்து பரிமாறப்படுகிறது.

லர்ப் சாலட்

இது துண்டு துண்டாக வெட்டப்பட்ட சிக்கன் கொண்டு தயாரிக்கப்படும் சாலட் உணவு. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி, சிக்கனை அதில் போட வேண்டும். பின்னர், வெங்காயம், எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், புதினா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து இந்த உணவு சமைக்கப்படுகிறது. லர்ப் சாலட், எளிமையான தயாரிப்பு முறையில் உள்ள சுவையான உணவாகும்.

ஸ்டீம்டு கார்லிக் ப்ரான்

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

புதன் 28 மா 2018