மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

தலைமைச் செயலதிகாரிகள் ஊதியம் உயர்வு!

தலைமைச் செயலதிகாரிகள் ஊதியம் உயர்வு!

2016-17 நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களைச் சேர்ந்த தலைமைச் செயலதிகாரிகளின் ஊதியம் அதற்கு முந்தைய ஐந்து நிதியாண்டுகளுக்கான ஊதிய அளவை விஞ்சியுள்ளதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஐ.ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘2016-17 நிதியாண்டில் ரூ.10 கோடிக்கும் மேல் ஊதியம் பெற்ற தலைமைச் செயலதிகாரிகளின் எண்ணிக்கை 123 ஆகும். இது இதற்கு முந்தைய நிதியாண்டை விட 16 சதவிகிதம் கூடுதலாகும். அதாவது, 2015-16 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 106 ஆக இருந்தது. தலைமைச் செயலதிகாரிகளின் அதிகபட்ச ஊதியம் ரூ.83.2 கோடியாகும். 2015-16 நிதியாண்டில் இது ரூ.71.5 கோடியாகவும், 2014-15 நிதியாண்டில் ரூ.80.3 கோடியாகவும் இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தலைமைச் செயலதிகாரிகளின் ஊதியம் 85 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

குடும்ப சொத்து நிறுவனத்தில் பணியாற்றும் தலைமைச் செயலதிகாரிகளின் ஊதியம் ரூ.4.2 கோடி முதல் ரூ.83.2 கோடி வரையில் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தலைமைச் செயலதிகாரிகளின் ஊதியம் ரூ.4.1 கோடி முதல் ரூ.38.1 கோடி வரையில் உள்ளது. அதேபோல, பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தலைமைச் செயலதிகாரிகளின் ஊதியம் ரூ.30 லட்சம் முதல் ரூ.1.8 கோடி வரையில் உள்ளது. ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரையில் 94 பேரும், ரூ.20 கோடி முதல் ரூ.35 கோடி வரையில் 17 பேரும், ரூ.35 கோடி ஊதியத்தை 12 பேரும் பெறுகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

இது, இந்தியாவின் முன்னணி 500 நிறுவனங்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றி வருபவர்களுக்கான ஊதியம் குறித்த ஆய்வறிக்கையாகும்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon