மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

சர்ச்சை பேச்சு: நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சை பேச்சு: நீதிமன்றம் உத்தரவு!

ஹெச்.ராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் எனச் சமூக வலைதளத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் சிலை உடைப்பு சம்பவங்கள் ஏற்பட்டன. பெரியார் குறித்து தனது அட்மின் இத்தகைய கருத்தை வெளியிட்டதாகவும், இந்தக் கருத்து மற்றவர்களின் மனதைப் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் ராஜா கூறியிருந்தார்.

இதற்கிடையே ஈரோட்டில் கடந்த 3ஆம் தேதி நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் இல்லாமல், பெரியார் சிலையைச் சேதப்படுத்தினால் கைகள் துண்டாக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

வன்முறையைத் தூண்டும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிய அவர்மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்செங்கோடு காவல் நிலையத்தில் திருச்செங்கோடு நகர பாஜக தலைவர் ரஜினிகாந்த் புகார் அளித்தார். இந்தப் புகார்மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று (மார்ச் 27) விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்செங்கோடு நகரக் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon