மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

தினம் ஒரு சிந்தனை: இழப்பு!

தினம் ஒரு சிந்தனை: இழப்பு!

வைத்துக்கொள்ள எதுவும் இல்லையென்றால் இழப்பதற்கும் எதுவுமில்லை.

- வில்லியம் ஷேக்ஸ்பியர் (26 ஏப்ரல் 1564 - 23 ஏப்ரல் 1616). ஆங்கிலக் கவிஞர், நாடக ஆசிரியர். இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர். அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள் மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நாடக ரசிகர்களால் மட்டுமின்றி புகழ்மிக்க கவிஞர்களாலும் இலக்கிய விமர்சகர்களாலும் வெகுவாகப் போற்றப்பட்டவர். அவரது ஆரம்ப நாடகங்கள் முக்கியமாக நகைச்சுவை மற்றும் வரலாறுகள் எனப் பல பிரிவுகளைத் தொட்டது. ஹேம்லட், கிங் லியர், ஒத்தெல்லோ மற்றும் மெகாபெத் ஆகிய ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon