மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

ஹெல்த் ஹேமா: கண்கள் உலர்தல் மற்றும் உராய்வு பிரச்சினைகளுக்கான தீர்வு!

ஹெல்த் ஹேமா: கண்கள் உலர்தல் மற்றும் உராய்வு பிரச்சினைகளுக்கான தீர்வு!

கண்கள் குறித்த மற்றொரு பிரச்சினை உலர் கண் என்று குறிப்பிடப்படுகிறது. கண் உராய்வின் போது போதுமான அளவு கண்ணீர் அல்லது பராமரிப்பு இல்லாத போது இது ஏற்படும்.

இவை கண்களை எரிய செய்யும் மற்றும் சங்கடமான நிலையை உருவாக்கும். நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவது மற்றும் வெளியே காற்றில் அதிக நேரம் இருப்பதால் கண் உலர்கின்றது. இந்த நிலை தொடரும் போது மருத்துவரை அணுக வேண்டும். கண்கள் உலர்வதர்கான சிகிச்சையானது கண்களில் ஈரப்பதத்தை தக்க வைக்க மருந்து விடுதல் போன்று எளிமையானதாகவே இருக்கும்.

நாள்பட்ட பிரச்சினையாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் கண் இமைகளின் மூலையில் உள்ள வடிகால் ஓட்டையை அடைத்து கண்களில் நீரைத் தக்க வைக்க செய்ய வேண்டும்.

விழி வெண்படல அழற்சி (Conjunctivitis) விழி வெண்படல அழற்சி என்பது மற்றொரு கண் குறித்த பிரச்சினை ஆகும். இது வலி, அரித்தல் மற்றும் கண்கள் சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

கண் இமைகளில் வீக்கம் மற்றும் கார்னியா போன்றவற்றால் இது ஏற்படுகின்றது. பொதுவாக விழி வெண்படல அழற்சி தூசி மற்றும் ஒவ்வாமையால் ஏற்படுகின்றது. சொட்டு மருந்து, வீட்டில் தூசியை குறைத்தல், இன்டோர் காற்று சுத்தப்படுத்தியைப் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலமாக இக்குறைபாட்டை சரிபடுத்தலாம்.

உராய்வுகள் (Abrasions)

உராய்வுகள் என்பது கார்னியாவில் கீறல்கள் விழுவது போன்றதாகும். இவை தூசி மற்றும் காண்டாக்ட் லென்ஸ் மூலமாக ஏற்படலாம். இவற்றுக்குச் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை செய்யும் போது சன் கிளாஸ் அல்லது காப்புக் கண்ணாடி பயன்படுத்துவதன் மூலம் இதைத் தடுக்க முடியும். உராய்வுகள் தொற்றை ஏற்படுத்தினால் கண்களுக்கு ஆன்டி-பயாடிக் கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon